Sunday 19th of May 2024 09:23:02 PM GMT

LANGUAGE - TAMIL
.
ஐபிஎல்-2021: ஹட்ரிக் வெற்றி மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து சென்னை!

ஐபிஎல்-2021: ஹட்ரிக் வெற்றி மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து சென்னை!


நடைபெற்று வரும் இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் ரீ-20 தொடரில் தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ள சென்னை அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஐபிஎல்-2021 தொடரின் லீக் ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய 15வது ஆட்டத்தில் கொல்கட்டா அணியை எதிர்கொண்ட சென்னை அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 220 ஓட்டங்களை பெற்றிருந்தது.

சென்னை அணியின் ஆரம்பத் துடுப்பாட் வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டூபிளெசி இருவரும் அதிரடியாக ஆடி ஓட்டங்களை குவித்திருந்தனர்.

42 பந்துகளை எதிர்கொண்ட ருதுராஜ் கெய்க்வாட் ஆறு 4 ஓட்டங்கையும், நான்கு 6 ஓட்டங்களையும் விளாசி 64 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 12.2 ஓவர்களில் 115 ஓட்டங்களையும் இருவரும் பெற்றிருந்தமை சென்னை அணி 200 ஓட்டங்களை கடந்து வெற்றி இலக்கினை நிர்ணயிக்க காரணமாக அமைந்திருந்தது.

அடுத்து வந்த மொயின் அலி 12 பந்துகளில் தலா இரண்டு 4 ஓட்டங்களையும், 6 ஓட்டங்களையும் விளாசி 25 ஓட்டகளைப் பெற்ற நிலையிலும், தோனி 8 பந்துகளில் இரண்டு 4 ஓட்டங்கள், ஒரு 6 ஓட்டம் அடங்கலாக 17 ஓட்டங்களை பெற்ற நிலையிலும் ஆட்டமிழந்திருந்தனர்.

தொடர்ந்து தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டூபிளெசி இறுதி வரை ஆட்டமிழக்காது 60 பந்துகளில் ஒன்பது 4 ஓட்டங்கள், நான்கு 6 ஓட்டங்கள் அடங்கலாக 95 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

221 ஓட்டஙகளை பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய கொல்கட்டா அணி 31 ஓட்டங்களைப் பெறுவதற்குள் முன்னணி வீரர்கள் ஐவரை இழந்து தடுமாறியது.

சென்னை அணியின் தீபக் சாகர் அற்புதமாக பந்து வீசி கொல்கட்டாவின் முன்னணி வீரர்கள் நால்வரை ஆட்டமிழக்கச் செய்திருந்தார்.

தொடர்ந்து விளையாடிய கொல்கட்டா தரப்பில் அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் மற்றும் ரசல் ஆகியோர் நிதானமாகவும், அதிரடியாகவும் ஆடி ஓட்டங்களை குவித்தனர்.

இந்நிலையில் 11.2 ஓவர்களில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 112 ஆக இருந்த போது ரசல் 54 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

22 பந்துகளை மட்டும் எதிர்கொண்ட ரசல் நான்கு 4 ஓட்டங்கள், ஆறு 6 ஓட்டங்கள் அடங்கலாக 54 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்திருந்தார்.

அதன் பின்னர் தினேஷ் கார்த்திக்குடன் கம்மின்ஸ் இணைந்து அதிரடியைத் தொடர்ந்தார்.

இந்நிலையில், 15ஆவது ஓவரில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 146 ஆக உயர்ந்த நிலையில், 24 பந்துகளில் 40 ஓட்டங்களை பெற்ற போது தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் தனி நபராக போராடிய கம்மின்ஸ் பின்வரிசை வீரர்களை களத்தில் வைத்துக் கொண்டு துடுப்பாட்ட சந்தர்ப்பத்தை தனதாக்கும் வைகயில் சிறப்பாக விளையாடியிருந்தார்.

56 ஓட்டங்களை துணை ஆட்டகரர்களது ஓட்ட பங்களிப்பு இல்லாமல் அணிக்கு தனி ஒருவராக பெற்றுக் கொடுத்த போதிலும் பின்வரிசை வீரர்கள் மூவரும் ஓட்டமெதனையும் பெறாத நிலையில் ஆட்டமிழந்த காரணத்தினால் கம்மின்ஸின் போராட்டம் வீணாகியது.

19.2 ஓவர்கள் நிறைவில் 202 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 20 ஓட்டங்களால் கொல்கட்டா அணி தோல்வியை தழுவியது.

இறுதி வரை ஆட்டமிழக்காதிருந்த கம்மின்ஸ் 34 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு நான்கு 4 ஓட்டங்கள், ஆறு 6 ஓட்டங்கள் அடங்கலாக 66 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

சென்னை அணி சார்பில், தீபக் சர்மா 4 விக்கெட்டுகளையும், நிகிடி 3 விக்கெட்களையும் வீழ்திதியிருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக டூபிளசி தேர்வு செய்யப்பட்டார்.

ஐபிஎல்-2021 தொடரில் சந்தித்த முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த போதிலும் அடுத்து வந்த மூன்று போட்டிகளிலும் தொடர் வெற்றியை பதிவு செய்து தோனி படை தமது பலத்தை நிரூபித்துள்ளது.

தற்போதைய நிலையில் பெங்களுர் மற்றம் டெல்லி அணிகளுடன் இணைந்து 6 புள்ளிகளை பெற்றிருந்த போதிலும் நிகர ஓட்ட விகித அடிப்படையில் புள்ளிப் பட்டியலில் சென்னை அணி முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE